×

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா: திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் ஆவணப்படம்

திருச்சி, ஆக. 30: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சென்னை கோயம்பேடு தூய தாமஸ் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியின் முத்தமிழறிஞர் கலைஞர் பற்றிய நடனம் மற்றும் திராவிடம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பொன்முடி, மா.சுப்ரமணியன். சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கலைக்காவிரி நடனக்குழு கல்லூரியின் செயலர் லூயிஸ் பிரிட்டோ தலைமையில் பங்கேற்றனர். நடனத்துறை பேராசிரியர்கள் ஜி.ஜெ.லீமாரோஸ், அபர்ணா பிரீத்தா உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஒருங்கிணைத்தார்.

The post சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா: திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் ஆவணப்படம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary ,Chennai ,Trichy Kalakaviri College of Fine Arts ,Trichy ,St. Thomas College ,Koyambedu ,Tamil Nadu Minority Commission ,Tiruchi Kalaikavir Fine Arts College ,
× RELATED கலைஞர் நூலகத்தில் ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி